• Jan 19 2025

பூமர் ஈஸ்வரியால் திணறும் ஜெனி குடும்பம்! பாக்கியா தலையில் விழுந்த பேரிடி! கண்ணனுடன் வீட்டைவிட்டு ஓடும் ராஜி?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம்... அதில், ராஜி அம்மாவை கட்டிப்பிடித்து அழ,அவரும் அழுகிறார். இறுதியாக ராஜிக்கு சமாதானம் சொல்லி அவரை தூங்க வைத்து செல்கிறார்கள்.

ஈஸ்வரியும் செழியனும் காரில் வர, குழந்தை அழுகிறது. செழியன் பதற்றம் அடைய, ஈஸ்வரி காரில் இருந்து பால் எடுத்துக் கொடுக்கிறார். மேலும், குலதெய்வ கோவிலுக்கு போகுமாறு ஈஸ்வரி சொல்லுகிறார். பாக்கியா செழியனுக்கு போன் பண்ணவும், ஈஸ்வரி எடுக்க வேணாம், அப்புறம் எடுக்கலாம் என சொல்கிறார்.


மறுபக்கம், ராஜி ரூமில் இருக்க கண்ணன் வந்து, கிளம்புமாறு சொல்ல, வீட்ட எல்லாரையும் எப்படி ஏமாத்திட்டு போறது என ராஜி தயங்க, அப்போ நீ இரு நான் போய் ரோடு முழுக்க நீ என்ன ஏமாத்திட்ட என்று போஸ்டர் ஒட்டுவன். அப்படியே உன் வீட்டு வாசலில் வந்து செத்துக் கிடப்பன் என மிரட்டுகிறார். 

வேறு வழியின்றி ராஜி சரி வாரேன் என புறப்பட பெட்டியை எடுத்து உடுப்பை அடுக்குகிறார்.   கண்ணன் ராஜிக்கு தெரியாமல் அவரது நகைகளையும் சேர்த்து எடுத்து வைக்கிறார். இறுதியாக ராஜியின் கையை பிடித்து இழுத்துச் செல்கிறார்.


அதன்பிறகு, காரில் இருவர் அவர்களுக்காக காத்து இருக்க, ராஜி கண்ணன் வந்ததும் காரில் புறப்பட்டு செல்ல, ராஜி காரில் இருந்து குடும்பத்தை நினைத்து அழுகிறார்.

இன்னொரு பக்கம், ஜெனி குடும்பம் வீட்டிற்கு வர, அங்கு குழந்தையை செழியன் எடுத்து போனதாக சொல்ல,கோவத்தில் ஜோசப் பாக்கியா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்கிறார். எனினும் ராமமூர்த்தி அவர்கள் இல்லை என சமாளிக்க, அவர் ஆவேசமாக செல்கிறார். பின்பு பாக்கியாவிற்கு போன் செய்து நடந்தவற்றை சொல்ல, பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இதை தொடர்ந்து பாக்கியா போன் பண்ணவும், செழியனை எடுக்க விடாமல் ஈஸ்வரி தடுக்கிறார்.

கல்யாண வீட்டில் விடிந்ததும் எல்லாரும் எழும்பி தமது வேலைகளை பார்க்க செல்கின்றனர். அப்போது ராஜியை எழுப்ப செல்ல, அவள் கொஞ்சம் தூங்கட்டும் என அவரின் சித்தி சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement