• Jan 18 2025

1000 லவ் ஃபெயிலியருக்கு நிகரான வலி! சூடுபறந்த 'நீயா நானா' மேடை! எமோஷனலான கோபிநாத்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் நிகழ்ச்சி  என்றால் அது ''நீயா நானா'' நிகழ்ச்சி தான். 

இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கெதிரான இவர், மக்களுக்கு சிறந்த  விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்.

அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இறுதியாக இடம்பெற்ற நிகழ்ச்சியில் மணமுறிவு செய்த பெண்கள் VS பொது மக்கள் இடையே விவாதம் வைக்கப்பட்டது.


அதில், தனது கணவரை விவாகரத்து செய்த பெண் ஒருவரின் பேச்சு, அவரின் வாழ்க்கையில் நடந்த விசயங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதன்படி குறித்த பெண் கூறுகையில், எனது கணவருக்கு 6 மாதங்கள் வேலை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு. எனது பெற்றோர் அவரை விட்டு வரும்படியும், நாங்கள் இருக்கும் வரை உன்னை பார்ப்போம் எனவும் சொன்னார்கள். நானும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் என் கணவரை பிரிந்து சென்றேன்.

எனினும், எனது சகோதரர்கள் ஒரு கட்டத்தில் நானே வீட்டை விட்டு போகும் படி செய்து விட்டார்கள். இதை தொடர்ந்து நான் வேளைக்கு சென்றேன். வந்து ஆடைகள் தைத்துக் கொடுத்தேன். இப்படியே எனது உழைப்பு தொடர்ந்தது. 10 வருடங்கள் அப்படியே ஓடி விட்டது. ஒரு நாள் மீண்டும் அவருடன் சேர முடிவு செய்தேன்.. ஆனால் அப்போது தான் அவருக்கு 2ம் திருமணம் நடந்தது.

அதன் பின் தான் யோசித்தேன்.. ஒரு 6 மாத காலம் வேலை இல்லை என்பதற்காக அவரை பிரிந்தேன். ஆனால் இப்போ கடுமையாக உழைக்கிறேன். ஒரு வேலை அந்த நேரத்தில் எனது கணவருக்கு உதவியாக நான் இருந்து இருந்தால் எனது வாழ்க்கையே மாறி இருக்கும். சந்தோசமாக இருந்து இருப்பேன். எனது வீட்டாரின் பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்டேன் என ரொம்ப உருக்கமாக பேசி இருந்தார்.

Advertisement

Advertisement