• Feb 23 2025

புகழின் உச்சியில் பிக் பாஸ் பூர்ணிமா.. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்! வெளியான புது அறிவிப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைக்கப்பட்ட பணப்பெட்டியை 16 லட்சங்களுடன் எடுத்துக் கொண்டு வெளியேறியவர் தான் பூர்ணிமா ரவி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர் சினிமாத் துறை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறிய வீடியோக்கள், போட்டோ சூட் என ஆரம்பித்து நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது காமெடி வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.


இதை தொடர்ந்து அண்மையில் நயன்தாராவுடன் இணைத்து நடித்த அன்னப்பூரணி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதற்கு அடுத்ததாக சாதாரண கிராமத்து வாழ்க்கையை எடுத்துக் காட்டும் படைப்பாக இவர் நடிப்பில் ' செவப்பி' என்ற படமும் விரைவில் வெளிவரவுள்ளது.


இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி  மூலம் கிடைத்த புகழின் காரணமாக,  பூர்ணிமா ரவிக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

அதன்படி, கோவை பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பூர்ணிமா ரவி. 

மேலும், ஹரி மஹாதேவன் என்பவர் இயக்கும் இந்த படத்தின் First Look  விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement