• Jan 19 2025

நடிகர் விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாட்கள் முதல் செய்த காரியம்! மகனால் வெளிவந்த உண்மை

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இவரது உடல் புதைக்கப்பட்டிருக்கும் தேமுதிக அலுவலகத்திற்குச் சென்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின்  நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.


அதில் அவரது மகன்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரபலங்களும்  கலந்துகொண்டார்கள். 

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் பாகன் விஜயபிரபாகரன் பேசும்போது ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்தார்.


அதன்படி அவர் கூறுகையில், சில யூடியூப் தளங்களில் விஜயகாந்த் பற்றி தவறான செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை, எங்கள் அப்பாவுக்கு கடைசி வரைக்கும் எல்லாமே ஞாபகம் இருந்துச்சு.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்கள் வீட்டில் வேலை செய்யும் குமார் அண்ணன், சோமு அண்ணன் இரண்டு பேரிடமும் அவருடைய பட பாடல்கள் எல்லாத்தையும் போட்டு கொடுக்க சொல்லி தாளம் போட்டு ரசித்துள்ளார்.

அவங்க சொன்ன பின்னர் சிசி டிவி பார்க்கும் போது தான் இதுவே எங்களுக்கு தெரியும் என எமோஷ்னலாக நிறைய விஷயங்கள் பேசியுள்ளார்.



Advertisement

Advertisement