• Dec 05 2023

இந்த வார ஓட்டிங் லிஸ்ட் ரெடி... குட்டையை குழப்பி விட்ட பிக் பாஸ்... பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் ஒரே சண்டையும், சச்சரவுமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் ரசிகர்களுக்கும் பார்ப்பதற்கு நல்ல இன்ட்ரெஸ்டாக இருந்தது.ஆனால் இந்த வாரம் கொஞ்சம் நார்மலாக போவதனால் பிக் பாஸ் ஒரு திட்டத்தை போட்டு ஆட்டத்தை குழப்பியுள்ளார். 


இந்த வாரம் பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க்கை கொடுத்தார் அதை தொடர்ந்து வீடு மீண்டும் பதட்ட நிலைக்கு வந்தது. மேலும் நேற்றைய எபிசோடில் தினேஷ் விஷ்ணுவின் சண்டை தான் உச்சகட்டமாக இருந்தது. இப்படி சுவாரசியமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. 


அந்த வகையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணி, ஆர் ஜே பிராவோ, பூர்ணிமா, அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் அதிகபட்சமாக விசித்ராவுக்கு தான் ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரவீனா, மணி, பிராவோ, பூர்ணிமா ஆகியோர் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.

இதில் கடைசி மூன்று இடம் அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது.  பிக்பாஸ் வீட்டில் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல் செட் ப்ராப்பர்ட்டி போல் இருக்கும் ஒருவர் தான் விக்கரம் அதனாலேயே பிக்பாஸ் கதவை மூடவாவது இவரை பயன்படுத்திக் கொள்வோம் என்று வேலை வாங்கி வருகிறார். இந்நிலையில் ஒரு வேலை விக்ரம் வெளியே போனாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.


Advertisement

Advertisement

Advertisement