தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "NEEK" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், திரைத்துறையின் முக்கியமான பிரபலங்களும் இதை பாராட்டியுள்ளனர். நடிகர் அருண் விஜய் இப்படத்தை பார்த்து பெரிதும் ரசித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்களின் நேர்த்தியான நடிப்பால் "NEEK" திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் அருண் விஜய், சமூக ஊடகங்களில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்ற புதிய நடிகர் பவிஷ், ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு குறித்து அருண் விஜய் கூறியதாவது, "பவிஷ் புது முகம் மாதிரியே தெரியல" அவரது நடிப்பு அனுபவம் வாய்ந்த நடிகர்களை போல் இருந்தது என்றதுடன் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் அவரது நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்றார். அத்துடன் இது அவரின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய வைப்பதாகவும் கூறியுள்ளார்.
"NEEK" படத்தின் அனுபவம் குறித்து கருத்து கூறிய அருண் விஜய் , அனைத்து இளைஞர்களும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார். அத்துடன் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தான் வீடு செல்வார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Listen News!