• Nov 21 2024

சரவெடியாக வெடிக்கும் அமரனின் வசூல் துப்பாக்கி.. எகிறும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அமரன். இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. தற்போது வரையில் அமரன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.

அமரன் படத்தை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

d_i_a

அமரன் படம் ரசிகர்களை மட்டும் இல்லாமல் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் அரசியல்வாதிகளின் பாராட்டுகளையும் பெற்றது. சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் இந்த படத்தினை பாராட்டி பதிவிட்டு இருந்தார்கள்.


இந்தியா முழுவதும் சுமார் 1000 - 1200 வரை தியேட்டர்களில் அமரன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் முதல் நாள் காட்சி தொடக்கம் தற்போது வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது அமரன் படத்தின் நான்காவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 42.3 கோடிகளை வசூலித்த நிலையில் நான்கு நாட்களில் முடிவில் 130 கோடி முதல் 135 கோடி வரை வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. கூடிய  விரைவில் இந்த படம் 200 கோடிகள் தாண்டும் எனவும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement