• Nov 04 2025

பிரதீப் ஆண்டனி வாழ்க்கையில் நடந்த கொண்டாட்டம் .. நண்பர்களின் ரகளை வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கு பற்றி ரெட் கார்ட் கொடுத்து வெளியே  அனுப்பப்பட்ட போட்டியாளர்தான் பிரதீப் ஆண்டனி. இவருக்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு காணப்பட்டது. ஆனால் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் விதமாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய 18 போட்டியாளர்களுள் ஒருவராக காணப்பட்டவர் தான் பிரதீப் ஆண்டனி. இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தான் டைட்டில் வின் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது.

d_i_a

ஆனாலும் இவருடன் இருந்த சக பெண் போட்டியாளர்கள் செய்த சதியினால் உலக நாயகன் கமலஹாசனினால் சற்றும் விசாரிக்கப்படாமல் வெளியே அனுப்பப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு பாத்ரூம் போவதாகவும், நைட் முழுக்க தூங்காமல் பெண்களை பார்ப்பதாகவும் இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.


இதை தொடர்ந்து பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பிரதீப் ஆண்டனி நடந்து கொண்டதாக அவருக்கு பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனாலும் நாளடைவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் அவர் மீது எந்த தப்பும் இல்லை என உண்மையை உடைத்தார்கள்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரதீப் ஆண்டனி. அதில் நண்பர்கள் பேச்சுலர் பார்ட்டி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரதிப் ஆண்டனிக்கு காதலி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இவருடைய திருமணத்தை எதிர்பார்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement