• Jan 19 2025

அஜித் எங்களை இப்ப கூப்பிடமாட்டாங்க... இப்ப காமெடி எல்லாம் இல்ல எல்லோரும் ஹீரோவாகிட்டாங்க... நடிகர் ரமேஷ் கண்ணா பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நகைச்சுவை  நடிகர் ரமேஷ் கண்ணா சமீப காலமாக நகைச்சுவை கட்டங்களுக்கு காணகிடைப்பது அரிதாக இருந்தத. அந் நிலையில் ஒரு பேட்டியின் போது அவர் இவ்வாறான விடையத்தை கூறியுள்ளார். 


நகைச்சுவை  நடிகர் ரமேஷ் கண்ணா சினிமாவில் பணியாற்றிய இந்திய நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனரும்  ஆவார் . பல துணை மற்றும் நகைச்சுவை என அஜித்துடன் இணைந்து அமர்க்களம், வில்லன் ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நீண்ட காலத்திற்கு பிறகு அஜித் -சிவா கூட்டணியில் வெளியான வீரம் படத்திலும் ரமேஷ் கண்ணா நடித்திருந்தார்.


"ஒரு காலத்தில எல்லா படங்களுக்கும் என்னைய கூப்பிடுவாங்க அந்த கால படங்களில நகைச்சுவை கட்டாயம் இருக்கும் இப்ப எடுக்கிற படங்களில நகைச்சுவைக்கு இடமே இல்லாத அளவுக்கு சண்டை காட்சிகள் , புது புது துப்பாக்கிகள் என்று புதுசு புதுசாக கண்டு பிடித்து யாரை எப்பிடி  சுடலாம் என்று இருக்கிறார்கள். கதை , காமடி என்றதே  இப்ப இல்லை . அப்ப எப்பிடி எங்களை எல்லாம் கூப்பிடுவாங்க , 


சூர்யா நயன்தாரா நடித்த ஆதவன் படத்தில கூட வடிவேலு கரெக்டர் நான் தான் பண்ணனும் , நான் தான் அந்த கதை எழுதினேன் ஒரு நகைச்சுவை எழுத்தாளர் அப்பிடி பண்ண மாட்டார்கள். ஆனால் நான் பண்ணினேன். துணை நகைச்சுவையாளராக நடித்தது மட்டுமில்ல , அந்த கதை நானே யோசிச்சி எழுதி பண்ணினது . 


நயன்தாராவுக்கு பின்னால திரியிற மாதிரி ஒரு இளையராஜா ரோல் எடுத்து பண்ணினேன். நான் எழுதின நகைச்சுவை கதைக்கு எப்பிடி நானே நடிக்கிறது என்று தயங்கினேன் , இயக்குனர் சொன்னதால நடித்தேன் . என்றும் கூறியுள்ளார் .  இப்ப வருகிற படங்களுக்கு நகைச்சுவை இல்லை அதனால் தான் நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .

Advertisement

Advertisement