• Jan 20 2025

ஏர்போர்ட்டில் நொண்டி நொண்டி நடக்கும் அஜித்? தீயாய் பரவும் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படுபவர் தான் நடிகர் அஜித். இவருக்கு என்று பலகோடி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில்  கமிட்டான அஜித், இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்து முடித்ததாக கூறப்பட்டது..

இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படம் படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது.


தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பிற்காக நடிகர் அஜித் அசர்பைஜான் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் விமான நிலையத்தில் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் அங்கு சிரமப்பட்டு நடப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடிகர் அஜித் காலில் ஏதும் அடிபட்டுள்ளதா? அவருக்கு ஏதும் காயமா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement