• Jul 19 2024

கோட் விஜய்க்கு மெயின் வில்லன் முதல் நடிகைகள் வரை பேசப்பட்ட சம்பளம்! பிரஷாந்துக்கு அடித்த ஜாக்பாட்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் பற்றிய தகவல்கள் நாளாந்தம் வெளியான வாரே உள்ளன.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், மோகன், சினேகா, லைலா என பிரபல நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த நிலையில் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கோட் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு பேசப்பட்ட சம்பளம் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன .

அதன்படி, கோட் படத்தில் நடிகர் விஜய்யை தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் கேரக்டர் என்றால் அது பிரசாந்தின் கேரக்டர் தான். அவருக்கு இந்த படத்தின் நடிக்க 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த அளவுக்கு எல்லாம் அவருக்கு சம்பளம் இல்லை 5 கோடி ரூபாய் மட்டில் தான் சம்பளம் கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.


கோட் படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக மைக் மோகன் நடித்துள்ளாராம். அவரைத் தொடர்ந்து பிரபுதேவாவுக்கும் 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல இந்த படத்தில் நடிக்கும் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட நடிகைகளுக்கு 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement