• Apr 22 2025

கில்லிக்கு போட்டியாக இறங்கும் அஜித் படம்! வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம்! ரிலீஸ் டேட்..

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் பழைய ஹிட் கொடுத்த தமிழ் திரைப்படங்களை ரீரிலீஸ் செய்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே தமிழ் நாட்டின் தவிர்க்கமுடியாத இரண்டு ஜாம்பவான்களின் ஹிட் படங்கள் ரீரிலீஸ் ஆக உள்ளது.


விஜயின் ஒட்டுமொத்த சினிமா பயணத்திற்கும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கில்லி ஆகும். அன்றளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த நிலையில் இது ரீரிலீஸ் ஆக உள்ளது என படக்குழுவினர் கூறி இருந்தனர்.


இந்த நிலையிலேயே  வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் ரீரிலீஷாக உள்ளது. அஜித்தின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தா வருகின்ற மே மாதம் முதலாம் திகதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement