• Nov 22 2024

பொய்யான தகவலை கூற வேண்டாம்: வலைப்பேச்சு யூடியூப் சேனலுக்கு இயக்குநர் லிங்குசாமி கண்டனம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூப் சேனல் வலைப்பேச்சு சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை கூறி வரும் நிலையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் இதில் இடம்பெறும் என்பதும் அவ்வப்போது திரையுலகினர் அந்த சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்  சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரித்த ’உத்தம வில்லன்’ திரைப்படம் லாபகரமான படம் என்று வலைப்பேச்சு சேனலில் கூறப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி. கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை . ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான்

பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன்" எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

"உத்தம வில்லன்" திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமல்ஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான "வலை பேச்சு" என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக 17-04-2024 அன்று தவறான தகவல்களை கூறியுள்ளனர் . இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement