• Feb 23 2025

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி குழந்தையே இதுதானா? மடியில் தூக்கி வச்சு கொஞ்சும் வீடியோ..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் நிலையில் பவித்ரா ஒரு தாயாகவே மாறிவிட்டார் என்று கமெண்ட் பதிவாகி வருகிறது.

குக் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஓ காதல் கண்மணி’ மற்றும் ’நாய் சேகர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா லட்சுமிக்கு 2 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அனுப்பிய செல்லப்பிராணிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி ஒரு நாயை தூக்கி வைத்து கொஞ்சி, முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தாய் தன் குழந்தையை எப்படி அன்பாகவும் பாசமாகவும் பார்த்துக் கொள்வாரோ அந்த அளவுக்கு பவித்ரா லட்சுமி செல்லப்பிராணிக்கு  காட்டிய பாசத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement