• Dec 04 2023

நடிகை த்ரிஷாவின் குளியல் வீடியோ.. நடிகர் சங்கம் களத்தில் இறங்கியிருக்க வேண்டும்! அந்தணன் ஆவேசம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடயம் குறித்து பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் கீழ்த்தனமாக அவர் பேசினார்.இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். இதன்பின் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், த்ரிஷாவின் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் காட்டமாக பேசியிருக்கிறார்.

அதன்படி அவர் கூறுகையில், 'த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதற்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான் போய் பொழப்ப பாருங்க என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மன்சூர் அலிகான் அவரது பொழப்பை பார்த்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அவர் பேசியதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.


இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதேபோல்தான் பல வருடங்களுக்கு முன்பு த்ரிஷா தங்கியிருந்த ஒரு நட்சத்திர விடுதியின் குளியல் அறையில் கேமரா வைத்து அவர் குளிக்கும் வீடியோவை வெளியிட்டார்கள். அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும்.

 அப்படி அளித்திருந்தால் கேமராவை வைத்தது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். கண்டிப்பாக அந்த ஹோட்டலில் த்ரிஷா தங்கியிருந்தபோது அவர் பயன்படுத்திய அறையை வெகு சுலபமாக பயன்படுத்தக்கூடிய ஒருவரால்தான் கேமராவை வைத்திருக்க முடியும். அது ஹீரோவாகவோ, ஹோட்டல் ஊழியராகவோக்கூட இருந்திருக்கலாம். அந்த வீடியோ பொய் என்று த்ரிஷா தரப்பு சொன்னாலும் டேமேஜானது அவரது பெயர்தானே. அப்போதே நடிகர் சங்கம் களத்தில் இறங்கியிருந்தால் நடிகைகளுக்கு அதுபோன்று நடந்திருக்காது. இதோ இப்போது மன்சூர் அலிகானும் இப்படி பேசியிருக்கமாட்டார். கண்டிப்பாக அவரை நடிகர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என்றார். 

Advertisement

Advertisement

Advertisement