• Jan 07 2026

'வைல்டு கார்டு என்ட்ரி' மாஸாக வரும் KPY பாலா! கம்பேக் கொடுப்பாரா பிரதீப்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் அடுத்து மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வர உள்ளதாக பிக் பாஸ் தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதன்படி, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது.


அத்துடன், குறித்த போட்டியில் தோல்வி பெற்றால் உள்ளே வர இருக்கும் வைல்ட் கார்ட்க்கு வழிவிட வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மில பாலா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலா உள்ளே வந்தால் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கலகலப்பு ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும், இம்முறையாவது பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரதீப் கம்பேக் கொடுப்பாராக என பார்த்தால் அவர் கம்பேக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.


Advertisement

Advertisement