• Jan 19 2025

விஜயகாந்துக்கு திடீரென வழங்கப்பட்ட செயற்கை சுவாசம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின், உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார். 


இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நல குறைவு காரணாமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அவருக்கு மார்பு சளி, இடைவிடாத இருமல் இருப்பதால் இடைக்கு இடையில் செயற்கை சுவாசம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளாக நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement