• Jan 07 2026

நடிகை சமந்தா விவாகரத்து! சர்ச்சையான பேச்சு! மன்னிப்பு கேட்ட பெண் அமைச்சர்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. 


ஒரு பெண்ணாக பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சுரேகா, இதுபோன்ற பொய்யான கருத்துகளை கூறக்கூடாது என நடிகர் நாகர்ஜுனா கண்டனம் தெரிவித்தார். நடிகைகளின் சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவது வெட்கக்கேடான செயல் என அமைச்சரை கடுமையாக சாடியிருந்தார் நாக சைதன்யா.


கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது தனது கருத்தை திரும்ப பெற்றார் கொண்டா சுரேகா. இதன்மூலம் இந்த விஷயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அவர் பேசியதில் "கே.டி.ஆர் குறித்து விமர்சனம் செய்யும் அவசரத்தில் நடிகை சமந்தா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன். எனது பேச்சால் சம்மந்தப்பட்டவர்களின் மனம் புண்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். நடிகை சமந்தா - நாக சைதன்யா குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement