• Dec 03 2024

தென்னிந்தியா சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் டானியல் பாலாஜி உயிரிழப்பு .

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான டானியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டானியல் பாலாஜி தமிழ் திரையுலகின் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தார் 

காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே  உண்டு.

பொல்லாதவன், விஜயின் பைரவா உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார்.

அதேபோல், பைரவா, வட சென்னை ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும்.

48-வயதான இவருக்கு இரவு  திடீரென  நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement