• Jan 18 2025

பாதி காசு நான் கொடுத்தேன், மீதிக்காசு இன்னொருத்தர் கொடுத்தாரு.. பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி தந்த பாலா..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

கஷ்டப்படும் பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த கேபிஒய் பாலா இதில் பாதி காசு தான் நான் கொடுத்தேன், மீதி காசு இன்னொருத்தர் கொடுத்தார் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கேள்வி கேபிஒய் பாலா பல சமூக சேவை செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது, சென்னை வெள்ளத்தின் போது நேரடியாக வெள்ள பகுதியில் சென்று ரொக்க பணம் கொடுத்தது என வரிசையாக அவர் உதவியை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பெண் ஒருவர் ஆட்டோ வாங்க முடியாமல் சிரமப்படுவதை கேள்விப்பட்ட பாலா உடனே ஒரு புதிய ஆட்டோ மூன்று லட்ச ரூபாய்க்கு வாங்கி அந்த பெண்ணையே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சர்ப்ரைஸ் ஆக ஆட்டோவை அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணிடம் இந்த ஆட்டோவின் விலை மூன்று லட்சம், ஆனால் நான் பாதி காசு தான் கொடுத்தேன், மீதி காசு கொடுத்தது யார் என்பதை பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்க உடனே அந்த பெண் ’ஆமாம்’ என்று கூற அப்போது காரில் இருந்து நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் இறங்கி வருகிறார்.

இதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ராகவா லாரன்ஸை கட்டிப்பிடித்து அவரிடம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த வீடியோவை ராகவா லாரன்ஸ் ஆனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement