• Jan 19 2025

நடிகர் பிர்லா போஸ் மகன் கடத்தல்! கார் பிரச்சினை கடத்தலில் முடிந்தது! வேதனையில் நடிகர்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பிரலாபாஸ். படங்கள் சினிமா என மாறிமாறி நடித்து வருகிறார். இவருடைய மகனை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பலமா தாக்கி இருக்குற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் மிர்லாபாஸ் அவருடைய மகன் தாக்கப்பட்டது தொடர்பாக இவ்வாறு கூறியுள்ளார். சென்னையில் நான் இருக்கும் அப்பாட்மென்ட் கீழ் இருக்குறவங்க கூட சின்ன பிரச்சினை.

அந்த வீட்டு பையன் உடம்பு சரியில்லாம இருந்த போது அவரை பார்க்க அவருடைய நண்பர்கள் வந்து இருந்தாங்க. அப்போது அங்க வந்த பையன் என் காரை டேமேஜ் பண்ணிட்டான். 


அத அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லவே வயசு வித்தியாசம் இல்லாம ரொம்ப மோசமா பேசிட்டான். இதுனால என்னோட மகனும் கோவத்துல சத்தம் போட்டுட்டான். இது எல்லாம் நடந்து 2 மாதம் இருக்கும் நான் இப்போ வேட்டையன் படத்துல நடிச்சிட்டு இருக்கேன்.

ஒரு வாரமா வீட்டுக்கு போகவில்லை இத நோட் பண்ணி என்னோட பையன் டிவுஷன் முடிச்சிட்டு வரும் போது கும்பலா வந்து அவனை கடத்தி கொண்டு போய் அடிச்சி இருக்காங்க. 

இத கேள்விபட்டு நான் வந்து பார்க்கும் போது அவனால எழுந்துக்கொள்ளவே முடியவில்லை. ரெத்தம் வராம உள்காயம் இருக்குறமாதிரி அடிச்சி இருக்காங்க.

வைத்தியசாலையில் காட்டும் போது அதுக்காகவே பயிற்சி பண்ணுனவங்க அடிச்சி மாதிரி இருக்கு என்று சொன்னாங்க. நான் போலீசில் புகார் கொடுத்து இருக்கேன் என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement