• Jan 19 2025

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக திடீர் மரணம்!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இணையத்தில் வைரலாகி காமெடி நடிகராக புகழ் பெற்றவர் தான் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா பட குறியீட்டை காட்டி பிரபலமானார். அந்த குறியீட்டினாலே அடையாளமாக காணப்பட்டார்.

மேலும் காத்து வாக்குல இரண்டு காதல், கோலமாவு கோகிலா, ஜாம்பி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை கேரக்டரில் நடிப்பதற்கும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.

பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் இல்லாமல் சின்ன படங்களில்  நடப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதாகவும் அந்த படங்களில் நடித்து வந்ததாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.


தனக்கு சினிமாவில் கோடி கோடியாக சம்பளம் கிடைத்தது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் இன்னும் வாடகை வீட்டில் தான் வசிப்பதாகவும் தனக்கு கிடைத்த அதிகபட்ச சம்பளமே இருபதாயிரம் ரூபாய் தான் எனவும் கூறியிருந்தார்.

சில youtube சேனல்களில் பிஜிலி ரமேஷுக்கு கேன்சர் நோய் உள்ளதாகவும் அவர் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் கூறினார்கள். ஆனாலும் அவர் தனக்கு கேன்சர் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். எனினும் அவருக்கு குடிப்பழக்கம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நிலை குறைவு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். தற்போது இந்த தகவல் வெளியாகி பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றது.


Advertisement

Advertisement