• Sep 09 2024

நான் பட்ட அவமானம் இருக்கே.. ரொம்ப கேவலமா இருக்கு! வீடியோவில் புலம்பித் தள்ளிய மணிமேகலை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கலையுலக பயணத்தை முதன்முதலாக ஆரம்பித்தவர் தான் விஜே மணிமேகலை. இவர் 90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினியாக காணப்படுகின்றார்.

தொலைக்காட்சி தொகுப்பாளியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வரும் மணிமேகலை, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் பணியாற்றி வருகின்றார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக திகழ்ந்து வருகின்றார்.

இவருடைய கலகலப்பான பேச்சும் எதார்த்தமாக இவர் பழகும் குணமும் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது. எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் ஏழை எளிய மக்களிடம் கூட மிகவும் சாதாரணமாகவே பழகும் குணம் கொண்டவர்.

இவ்வாறு பிரபலமான மணிமேகலை உசைன் என்ற நடன கலைஞரை தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் விஜய் டிவியில் பங்கேற்கும் வாய்ப்பு மணிமேகலைக்கு கிடைத்தது.


அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அத்துடன் மணிமேகலையும்  தனது கணவரும் இணைந்து சொந்தமாகவே youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்கள். அதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கின்றது எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிமேகலை தனது கணவருடன் சென்னை உள்ள பாஸ்போர்ட் நிலையத்திற்கு சென்ற போது அவர் அவசர அவசரமாக சென்றதில் இரண்டு கால்களிலேயும் வெவ்வேறு  செருப்புகளை அணிந்து சென்று விட்டார்.

இதை அவர் கவனிக்காமல் குறித்த ஆபீஸுக்கு சென்று தான் கவனித்துள்ளார். உடனே அதை வீடியோவாக எடுத்து ஆபிஸில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் பட்ட அவமானம் இருக்கே.. ரொம்ப கேவலமா இருக்கு என புலம்புகின்றார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement