• Jan 19 2025

ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்த ஆர்த்தி!! அடுத்த விவாகரத்து கன்ஃபார்ம்?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் ஜெயம் ரவி. தற்போது வரையில் 25 படங்களுக்கு மேல் நடித்து வெற்றி நாயகனாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

தற்போது ஜெயம்ரவி நடிப்பில் ஜீனி, பிரதர் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றது. ஆனாலும் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் தக்லைஃப்  படத்தில் முதலில் கமிட்டான ஜெயம்ரவி, அதற்கு பின்பு கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து வெளியாகியிருந்தார்.


ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'காதல் அது வார்த்தை அல்ல வாழ்க்கை' என பதிவிட்டுருந்தார் ஆர்த்தி.  

இந்த நிலையில், அதே இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் விவாகரத்தை கன்ஃபார்ம் செய்யும் வகையில் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அத்தனையும் நீக்கியுள்ளார்.

இதற்கு முன்பு பிரபலங்கள் இதுபோன்று செய்துள்ளதால் ஜெயம்ரவி -ஆர்த்தி தம்பதியினரும் விவாகரத்து செய்வது உறுதியா? என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement