• Mar 14 2025

'பரமசிவன் பாத்திமா' ட்ரெய்லரை வெளியிட்ட அரசியல் தலைவர்கள்! பின்னணி என்ன?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையால் இடம் பிடிக்கப் போகும் திரைப்படம் 'பரமசிவன் பாத்திமா'. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விமல் நடித்திருக்கிறார். குறிப்பாக, அரசியல் சார்ந்த கதைகள் மற்றும் சமூக சிந்தனைகளை முன்வைக்கும் கதை என்பதால் வலுவான இடம் பிடிக்கும்  படைப்பாக இது அமைந்திருக்கிறது.

படத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக அரசியல் தாக்கம் என்பவற்றை மனதில் கொண்டு, தமிழக அரசியலில் முக்கியமான இரு தலைவர்களான சீமான் மற்றும் அண்ணாமலை இணைந்து இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.


இவ்விருவரும் முதல் முறையாக இணைந்து இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இதனால் இத்திரைப்படம் அரசியலையும் சினிமாவையும் இணைக்கும் ஒரு முக்கிய படமாக அமையும் எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த படத்தின் கதை சமூகத்தில் ஒரு முக்கியமான சிந்தனை மோதலை உருவாக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. பரமசிவன் மற்றும் பாத்திமா என்ற இரு பாத்திரங்களின் பயணத்தை மையமாக வைத்து மதச்சார்பற்ற நட்பு மற்றும் ஒற்றுமையுடன் இந்தக் கதை அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களில் மாபெரும் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. நடிகர் விமலின் புதிய அவதாரம் மற்றும் இயக்குநரின் மெருகூட்டிய வசனங்கள் ஆகியவை ரசிகர்கள் விரும்பத்தக்க வகையில் அமைந்துள்ளது. அத்துடன் இப்படம் அரசியல் கலந்த சிறப்பான படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement