விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பமாகி குறுகிய காலத்திலே டாப் பொசிஷனுக்கு வந்த விஜய் டிவி சீரியல்களில் இதும் ஒன்று.
இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் பரிகாரம் செய்கிறார்கள். அம்மன் போல கெட்டப்பில் விஜயா தீச்சட்டி கொண்டு செல்ல, மனோஜ் உடம்பில் வேப்பிலை கட்டிக்கொண்டு தீச்சட்டி எடுக்கிறார். அவர்கள் தீச்செட்டி எடுப்பதை முத்து வீடியோ போட்டு காட்ட அண்ணாமலை, ரவி, ஸ்ருதி 3 பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
இந்நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ லீக்காகி உள்ளது. அதில் மீனா பார்வதி வீட்டுக்கு போகிறார். அங்கு பார்வதி தனது தாலி செயினை வைத்து ரோஹினி தன்னிடம் ரூ. 2 லட்சம் கொடுத்து விஜயாவிடம் பணம் கிடைத்துவிட்டதாக கூற சொன்னார் என பார்வதி மீனாவிடம் கூறுகிறார்.
மீனா ரோகினியா இப்படி செய்தார், கண்டிப்பாக தெரியுமா என்று சந்தேகத்துடன் கேட்கிறார். இதனால் ஒரு வேலை ரோகிணி தான் பணத்தை எடுத்தார் என்ற உண்மை தெரியவருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!