• Jan 19 2025

சுனைனா வருங்கால கணவரை வச்சு செஞ்ச இர்பான்.. இதெல்லாம் காமெடியா? வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை சுனைனா விரைவில் பிரபல துபாய் யூடியூபர் கலீத் அல் அமேரி என்பவரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான இர்பான் வச்சு செஞ்ச வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கலீத் அல் அமேரி சமீபத்தில் இந்தியா வந்துள்ள நிலையில் அவரை ஒரு உணவகத்தில் சாப்பிட அழைத்து செல்லும் வீடியோவை இர்பான் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மீன் சாப்பிட கலீத்தை அழைத்துச் செல்லும் இர்ஃபான், அதில் மிளகாய் மற்றும் மிளகாய் தூள் அதிகம் போட்டு மீன் வறுவல் ஒன்றை தானே செய்து பரிமாறுகிறார்.

அதை மிகவும் ஆவலோடு சாப்பிட்ட கலீத், காரம் காரணமாக கண்ணீர் விட அதை பார்த்து இர்பான் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதெல்லாம் ஒரு காமெடியா? என நெட்டிசன்கள் இர்பானை வறுத்து எடுத்து வருகின்றனர்

ஆனால் அதே நேரத்தில் உண்மையில் இது இருவரும் நேருக்கு நேர் சந்தித்த வீடியோ போல் தெரியவில்லை, தனித்தனியாக உள்ள வீடியோவை ஒட்டி வெட்டி இணைத்தது போல் தெரிகிறது என்றும் சிலர் சந்தேகப்படுகின்றனர்.  

காமெடி என்ற பெயரில் இது போன்ற லூசுத்தனமான கான்செப்ட் வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று நெட்டிசன்கள் காரசாரமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement