• Jan 18 2025

ரிலீசுக்கு இன்னும் சில மணி நேரங்களே.. இன்னும் முதல் காட்சியே காத்து வாங்குது.. ‘இந்தியன் 2’ பரிதாபங்கள்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் நாளைய முதல் நாள் முதல் காட்சி கூட இன்னும் முழுமையாக முன்பதிவு செய்யப்படாமல் பல இருக்கைகள் காலியாக இருப்பதை பார்க்கும் போது கோலிவுட் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கமல்ஹாசன், ஷங்கர், அனிருத், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டணியே இருந்தும் ’இந்தியன் 2 ’படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே லைக்கா நிறுவனம் பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்கும் என்று கூறப்படும் நிலையில் முன்பதிவு நிலைமையை பார்த்தால் லைக்கா நிலவரம் இன்னும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இந்த படத்தின் முதல்காட்சியான காலை 9 மணி காட்சி கூட இன்னும் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதை பார்க்கும்போது இந்த படம் வசூலில் சாதனை செய்ய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.



ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் என்றால் முதல் மூன்று நாட்களுக்கு முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் முழுமையாக புக் ஆகிவிடும் என் நிலையில் ’இந்தியன் 2’’ முதல் நாள் முதல் காட்சியே இன்னும் முழுமையாக முன் பதிவு செய்யப்படாமல் இருப்பதை பார்க்கும்போது ’இந்தியன் 2’ திரைப்படம் கமல்ஹாசனுக்கு ’விக்ரம்’ போல ஒரு வெற்றி படமாக அமையுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் ஒருவேளை முதல் காட்சியை பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியானால் அதன் பிறகு வேகமாக முன்பதிவு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement