• Dec 21 2024

சௌந்தர்யாவுக்கு எதுக்கு ஓட்டு போடுறாங்க.? அசிங்கப்படுத்தி பேசிய பிரபலம்

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனை விஜய் சேதுபதி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனில் பங்கு பற்றிய 18 போட்டியாளர்களுள் முக்கிய போட்டியாளராக காணப்படுபவர் சௌந்தர்யா. இவர் பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதியுடன்  பேசியபோது, தனது குரலால் பல இடங்களில் அவமானத்தை சந்தித்ததாகவும் அதனால் தான் மிமிக்கிரி பண்ணுவது போல் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைக் கேட்ட விஜய் சேதுபதி உங்களுடைய நிஜமான குரலே நன்றாகத்தான் உள்ளது என்று அவரை வாழ்த்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்திருந்தார். இந்த சீசனில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ் சௌந்தர்யாவுக்கு என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

d_i_a

அவர் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி இருந்தாலும் சௌந்தர்யா தான் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். எனினும் அவருக்கு பிஆர் டீம் இருப்பதாகவும், பணத்தை வைத்து தான் அவர் இவ்வளவு தூரம் வந்துள்ளார் எனவும் பல தகவல்கள் பரவின.


இந்த நிலையில், சௌந்தர்யா சிவப்பு நிறமா இருக்காங்க... வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பது போலவே அவரது நடவடிக்கை இருக்குது என்று நடிகர் ஒருவர் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், சில படங்களை பார்க்கும் போது அதில் நல்ல படம் என்றால் சூப்பர் படம் என்று சொல்லுவேன். ஆனால் படம் நல்லா இல்லை என்றால் மொக்க படம் என்று தான் சொல்லுவேன். ஆனால் இதை வெளியே சொல்ல மாட்டேன். காரணம் நானும் சினிமாவில் தான் உள்ளேன்.

ஆனால் இந்த கேமில் விளையாட வந்துள்ள சௌந்தர்யாவுக்கு எதுக்கு ஓட்டு போடுறாங்க என்றே தெரியவில்லை. செகப்பா இருக்காங்க.. வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல தான் உள்ளது. ஆனா அவங்க தான் டாப் 3ல இருக்காங்க.

சௌந்தர்யா யூடியூப் சேனல், வெப் சீரியல் போன்றவற்றில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அவருக்காக பி ஆர் டீமும் வேலை செய்வதாக கூறப்பட்டது. அவருடைய நண்பர்களும் எத்தி விடுறாங்க என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

Advertisement

Advertisement