காமெடி நடிகரான கூல் சுரேஷ், மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே டிடிஎப் வாசன் ஹீரோவாக நடிக்க இருந்த நிலையில், அவருக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் நீக்கப்பட்டு கூல் சுரேஷ் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் மஞ்சள் வீரன் படத்தின் பட பூஜைகள் மற்றும் அதில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் போன்றவற்றின் தகவல்கள் வெளியான போதும் இந்த படம் எப்போது ஆரம்பிக்கப்படும், என்ன கதை என்பது தொடர்பான எந்த ஒரு தகவலும் அதற்குப் பிறகு வெளியாகவில்லை.
d_i_a
மேலும் கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு உரிய கெட்டப் போட்டு சென்று திரையரங்கு வாசலை அதிர விடுவார். நேற்றைய தினமும் விடுதலை 2 படம் தொடர்பிலான தனது அட்டகாசமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் கூல் சுரேஷ் செய்த சமூக சேவை ஒன்று இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ஆம்புலன்ஸ் செல்லும் போது தயவு செய்து வழி விடுங்கள் என சீரியஸாக அட்வைஸ் பண்ணி உள்ளார். தற்போது அவர் வழங்கியபடி பேட்டி வைரல் ஆகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், ஆம்புலன்ஸ் வந்தால் தயவு செய்து வழி விடுங்கள். அது ஆட்டோவாக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி.. மனசாட்சிப்படி கொஞ்சம் வழி விடுங்கள்.. நான் கருத்து சொல்ல வந்தால் நான் பெரிய ஆளா? இவர் சொல்லும் கருத்தை கேட்க வேண்டுமா என்று எல்லாம் சொல்லுவார்கள்.
ஆனால் ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் போராடுகின்றது. இதனால் தயவுசெய்து ஆம்புலன்ஸை கண்டால் வழி விடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
Listen News!