• Dec 04 2024

யாரு கெத்து? போட்டியாளர்களை டம்மியாக்க நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்! மண்ணை கவ்விய தீபக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 11வது நாளாக சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு நாளும் மூன்று ப்ரோமோக்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியாகி அன்றைய எபிசோட் தொடர்பிலான எதிர்பார்ப்பை எகிற வைக்கும்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் யார் கெத்து என்ற நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்கில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் முட்டி மோதிய காட்சிகள் முதலாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

அதன்படி யார் கெத்து என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது.  மொத்தமாக மூன்று வீடுகளில் எந்த வீடு அறிவில், திறமையில் மற்றும் டீம் வெக்கில் சிறந்தது என்பதற்கான டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க் இன் முடிவில் ஒரு வீட்டுக்கு நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகின்றது என்று பிக் பாஸ் அறிவிக்கின்றார்.


இதை தொடர்ந்து 1000 கோவில்களை கொண்ட நகரம் என்ற அந்த கேள்விக்கு திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை என்று கேட்கப்பட்டவுடன், 3 டீமில்  உள்ளவர்களும் வேகமாக வந்து பஸ்ஸரை அழுத்த அது உடைந்து போகின்றது. அத்துடன் தீபக்கும் கீழே விழுந்து விடுகின்றார்.

அவரை தூக்கி விடுவதற்கு சக போட்டியாளர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்கள். தற்போது இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று, நாமினேஷன் ஃப்ரீ பெறுவது யார் என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement