• Jan 19 2025

''என் அம்மா இறந்தப்போ Pink Lipstick போட்டுக்கிட்டு போனேன் “ வனிதா எமோஷனல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் காணப்படுபவர் தான் வனிதா விஜயகுமார்.

இவரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார், கடந்த ஆண்டு இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி இருந்தார்.

பிக் பாசில் பங்கு பற்றிய ஜோவிகாவுக்கு ஆரம்பத்தில் அவரது துடிப்பான பேச்சை பார்த்த ரசிகர்கள், ஜோவிகா ஆர்மி ஆரம்பித்து அவரைக் கொண்டாடி வந்தனர்.

எனினும் நாளடைவில் அவரது பேச்சு, திமிர் கதைகள் என்பவற்றால் ஜோவிகாவை வெறுத்த ரசிகர்கள் அவரை அன் லைக் செய்தனர்.


தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா, போட்டோ சூட், மாடலிங் செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தனது அம்மா இறந்த போது பிங்க் லிப்டிக் போட்டுக்கிட்டு போனேன் என்று சொல்லியுள்ளார்.


அதாவது, தனது அம்மா இருக்கும் போது எப்போதுமே என்னை லிப்டிக் போட சொல்லுவார். ஒரு பெண்ணுக்கு லிப்டிக் ரொம்ப முக்கியம் என்று சொல்லுவார். அதனால தான் அவர் இறந்த போதும் அவருக்கு பிடித்து போல உடை அணிந்து பிங்க் லிப்டிக் போட்டு சென்றேன் என கூறியுள்ளார்.

அண்மையில் விஜயகுமார் பேத்தியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால் அதற்கு வனிதா அழைக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில், வனிதாவின் பழைய வீடியோக்கள், பேட்டிகள் மீண்டும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement