• Sep 09 2024

மகனின் மானம் காத்துல போக ஷோபனாமா செய்த காரியம்! வைரல் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய்க்கு பல கோடி கணக்கில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். தற்போது இவர் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வருகின்றன. ஆனாலும் சில சமயங்களில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விடுகின்றன.

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு, பீஸ்ட், லியோ  ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக தயாரிப்பு நிறுவனங்கள் கூறினாலும் உண்மையிலேயே விமர்சன ரீதியாக படுமோசமாக ட்ரோல் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா என பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் கூட்டணி அமைந்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவும் பெரிதாகவே காணப்பட்டது.

கோட் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகின. நேற்றைய தினம் கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகியிருந்தது. குறித்த பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார்.


ஸ்பார்க் என தொடங்கும் கோட் படப்பாடலில் விஜய் மிகவும் இளமையாக காட்டுவதற்காக டி ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் தற்போது வரையில் விஜயை அஜித், ரஜினிகாந்த் ரசிகர்கள் முதல் பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றார்கள்.

விஜய்யை நார்மலாக எடுத்திருந்தால் கூட அவர் இளமையாகவே இருந்திருப்பார். டெக்னாலஜி என்ற பெயரில் படுமோசமாக சொதப்பி வைத்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பல விமர்சனங்கள் தற்போது வரையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விஜயின் அம்மா ஷோபனா தனது வீட்டில் உள்ள குட்டிசுடன் காத்து மேல காத்து சைட்ல.. என்ற ட்ரெண்டிங் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் மகனின் மானம் காத்துல போக இங்க காத்து சைட்ல ரில்ஸ் வேணுமா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement