பிக்போஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட நடிகை அன்ஷிதா இவர் ஏறத்தாழ 80 நாட்கள் வீட்டிற்குள் இருந்து வெளியேறியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முன்னரே சக போட்டியாளர் அர்ணாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
ஆனாலும் வீட்டிற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதவர்கள் போல் காட்டி கொண்டனர்.இதனை பார்த்த ரசிகர்கள் பல விமர்சனங்களை கூறி வந்தனர். பின்னர் அவர் வெளியேறும் போதும் vj விஷாலுடன் நெருக்கமாக பழகியமையினால் மீண்டும் இன்னொரு பிரச்சினையை சந்தித்தார்.
பிக்போஸ் செல்வதற்கு முன்னரே விஜய் டிவியில் செல்லம்மா சீரியலிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் அனைவராலும் அறியப்பட்டு வந்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியான jodi are you ready நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து வருகின்றார்.
கடந்த எப்பிசோட்டில் சாண்டி சுந்தரத்திற்கு ஜோடியான அன்ஷிதா நேற்றைய தினம் மிகவும் கேவலமான நடனத்தினை ஆடி எலிமினேட் ஆகும் கட்டத்தில் இருந்தார்.ஆனால் தற்போது அன்ஷிதா எலிமினேட் ஆகவில்லை என்கின்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.மற்றும் இவருக்கு ஜோடி சேர்ந்து ஆடுவதற்கு தற்போது சசி மாஸ்ட்டர் முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Listen News!