• Oct 01 2026

வைரமுத்துவின் பேச்சால் மீண்டும் வெடித்த தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. நடந்தது என்ன.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் பொதுவிழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால விருப்பம் என்றும், அதனை சட்டப்பூர்வமான நடைமுறையாக உருவாக்கிய முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்மொழிக்கும் தமிழர் அடையாளத்திற்கும் தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமான அடையாளமாக விளங்குகிறது என்று கூறினார்.


மேலும், "தமிழக எல்லைக்குள் நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது தமிழரின் பண்பாட்டையும் மொழி மரபையும் மதிக்கும் செயல். இந்த உரிமையை தமிழர்களுக்கு உறுதியாக பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி. அதற்காக அவரை நன்றியுடன் பாராட்டுகிறேன்." என்று வைரமுத்து தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரமுத்துவின் இந்தப் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து, தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் கருத்து என பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் இதுகுறித்து தங்களது மாறுபட்ட கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். 

இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்து பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம், அதன் வரலாறு மற்றும் தமிழர் அடையாளம் குறித்து மீண்டும் கவனம் திரும்பியுள்ள நிலையில், வைரமுத்துவின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement