• Jan 19 2025

இந்தவொரு காரணத்துக்காக தான் சம்மதிச்சோம்.. எங்க பொண்ண தப்பா பேசாதீங்க..!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனது திருமணம் ஏழாம் தேதி ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைமைகள் வரை பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

தனுஷ் திருமணத்தின் போது அக்ஷயா கழுத்தில் தாலி கட்ட முடியாத நிலையில், தனுஷின் கைகளைப் பிடித்து அவருடைய தாயார் தான் தாலிச் செயினை அக்ஷயா கழுத்தில் போட்டு விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

தனுஷும் அக்ஷயாவும் சிங்கப்பூரில் தமது ஹனிமூனை கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  தசை சிதைவு நோயால் தனுஷ் பாதிக்கப்பட்ட போதும் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என பிரபல மருத்துவர் ஒருவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

d_i_a

இந்த நிலையில், அக்ஷயாவின் பெற்றோர் தனது மகள் பற்றி பரவும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். அதன்படி அவர்கள் கூறுகையில், எனது மூத்த மகளுக்கு நான்கு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துச்சு. அவர் இப்போது சந்தோஷமாக உள்ளார். அதேபோலத்தான் எனது இரண்டாவது மகளுக்கும் வரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் நெப்போலியன் குடும்பத்திலிருந்து வரன் வந்தது.


எங்களுக்கு நெப்போலியன் மாமனார் குடும்பத்தோடு பல வருடமா பழக்கம் இருக்கு. நாங்க ஜெயசுதாவின் அப்பா வசித்த பகுதியில் தான் வசித்தோம். ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு அவர்களுடைய குடும்பத்தை தெரியும். முதலில் பெண் கேட்டபோது நான் தயங்கினேன். ஆனாலும் எனது மகள் நெப்போலியன் சார் குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும். அவருடைய குடும்பத்தில் திருமணம் செய்வது ரொம்ப சந்தோஷம் என்று சொன்னார். அதற்கு பிறகு தான் நாங்களும் பேசி முடிவெடுத்தோம்.

ஆனால் பலரும் எங்களை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டு உள்ளார்கள். எங்களுடைய மகள் பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றார்கள். இது எங்களை ரொம்பவும் பாதிக்க வைத்தது. எங்களுடைய மகளின் விருப்பத்தின்படி தான் அவளுக்கு சம்மதம் சொன்னான். கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகிவிட்டதால் ஊருக்கு கிளம்பினோம். மகள் அதை நினைத்து வருத்தப்பட்டார். எனக்கும் கஷ்டமா இருக்கு. ஆனா நெப்போலியன் குடும்பத்தார் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.

எனது மருமகன் தனுஷ் எங்க பொண்ணு மேல அதிகமான பாசம் வச்சு இருக்கார். அவளை அதிகமாக கேயர் செய்து பார்ப்பார். இதனால் யாரும் என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம். அவருடைய திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள் என அக்ஷயாவின் பெற்றோர் எமோஷனலாக கூறியுள்ளார்கள்.

Advertisement

Advertisement