• Jan 18 2025

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவித்யா இறக்கும் போது இப்படித் தான் இருந்தாரா?- இதை விடக் கொடுமை எதுவும் இல்லையே...

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளர்ந்தவர் தான் நடிகை  ஸ்ரீவித்யா.அவர் கதாநாயகியாக நடித்தபோது கமல் ஹாசனை காதலித்தார். அதனை இரண்டு பேருமே பின் நாட்களில் ஒத்துக்கொண்டனர். ஆனால் இரண்டு பேரின் காதல் பாதியிலேயே முடிந்தது. 

தொடர்ந்து உதவி இயக்குநராக பணியாற்றிய ஜார்ஜ் தாமஸ் என்பரைக் காதலித்து கரம் பிடித்தார். ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்துக்களை ஜார்ஜ் அபகரித்ததால் அவர் பணத்துக்காக தான் தன்னை திருமணம் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்த ஸ்ரீவித்யா அவரை 1980-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதனை அடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.அதன்படி காதலுக்கு மரியாதை, ஆனந்தம், தளபதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர் பின்னர் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டாராம்.இருப்பினும் புற்று நோய் காரணமாக ஸ்ரீவித்யா இறப்புக்குள்ளாகி விட்டார்.இந்த நிலையில் அவரது அண்ணி தற்பொழுது ஒரு பேட்டியளித்துள்ளார்.


அதில்"2003ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டே அவர் மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. சில வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு புற்றுநோய் என்பது எங்களுக்கு தெரியவந்தது. காலப்போக்கில் அந்த கேன்சர் அவரது முதுகு எலும்புக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. 

இப்படிப்பட்ட சூழலில்தான் ஸ்ரீவித்யா அவரது இறுதி கால நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பத்திரிகை செய்தி வந்தது. அதற்கு பிறகு அவரது அண்ணனும் என்னுடைய கணவருமான சங்கரை உடனடியாக ஸ்ரீவித்யாவை பார்ப்பதற்கு அனுப்பி வைத்தேன். அங்கு சென்று அவர் பார்த்தபோது ஸ்ரீவித்யாவுக்கு முடி எல்லாம் கொட்டி, முகமெல்லாம் மஞ்சள் நிறமாக மாறி இருந்திருக்கிறது. 

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர் கத்தியிருக்கிறார். ஏன் இங்க வந்த?: ஆனால் ஸ்ரீவித்யாவோ சங்கரை பார்த்து நீ ஏன் இங்கே வந்த. நீ அங்கே சென்று உன்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள் என சொல்லியிருக்கிறார். அதற்கு சங்கரோ அதெல்லாம் நான் செல்லமாட்டேன். இங்கேதான் இருப்பேன் என அடம் பிடித்திருக்கிறார். அதற்கு ஸ்ரீவித்யாவோ இல்லை என்னை பார்த்துக்கொள்ள எல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி சமாதானம் செய்திருக்கிறார்.


அன்றைய தினம் மதியம்தான் கமல் ஹாசனை ஸ்ரீவித்யா சந்தித்தார். அதற்கு பிறகு நாங்கள் அவரை சென்று பார்க்கும்போது அவரது கண்கள் எல்லாம் வெளியே வந்து முகம் எல்லாம் மஞ்சள் படிந்து கை எல்லாம் காய்ந்து போய் சுயநினைவை இழந்திருந்தார். சில மணி நேரங்கள்தான் அவர் உயிரோடு இருக்கப்போகிறார் என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிறகு எங்களது கண் முன்னாலேயே அவளது உயிர் பிரிந்தது. அதன் பின்னர் இறுதி ஊர்வலம் சென்று 14 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது" என்றும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement