• Jan 19 2025

விக்னேஷ் உதட்டில் முத்த மழை பொழிந்த லேடி சூப்பர் ஸ்டார்.. என்ன விசேஷம் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காதல்  ஜோடிகளில்  விக்னேஷ் சிவன் - நயன்தாராவும் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றார்கள். இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற தகவல் வெளியானதில் இருந்து தற்போது வரை இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக காணப்படுகின்றார்கள்.

நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இந்த படத்தை இயக்கியவர் விக்னேஷ். இதில் நடிக்க கமிட்டான நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களை கழித்து திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. தற்போது தனது குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை அதிகமாக கொண்டுள்ளார். இதன் காரணத்தினால் நிறைய படங்களில் கமிட் ஆவதை தவிர்த்து வருகின்றார். மேலும் தான் நடிக்கும் படங்களும் சென்னைக்குள்ளயே இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றாராம்.


இந்த நிலையில், இன்றைய தினம் விக்னேஷ் சிவன் தனது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதன் போது தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு முத்த மழை பொழிந்துள்ளார் நயன்தாரா. தற்போது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

குறித்த பதிவில் 'எனது எல்லாம் மூலமாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் உன் மீது வைத்துள்ள காதலை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. கடவுள் எப்போதும் உன் வாழ்க்கையில் எல்லா முகமாக கிடைக்க ஆசீர்வதிப்பார். நமது குழந்தைகள் ஆன உயிர் - உலக்கைப் போல..' என கேப்சன் போட்டுள்ளார். தற்போது விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement