• Oct 08 2024

ஹாஸ்பிடலில் அட்மிட்டான மீனா.. ரோகினிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..? ரவி வாழ்க்கையில் நுழைந்த புது கேரக்டர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா அம்மா வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு சத்யா சிகரெட் அடிப்பதாக மீனாவிடம் சொல்லுகிறார். இதனால் கோவப்பட்ட மீனா நேராக சிட்டியிடம் சென்று அவரை திட்டுகின்றார். மேலும் சிட்டியை பொறுக்கி என திட்ட கோபப்பட்ட சிட்டி மீனாவை தள்ளி விடுகிறார். 

அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து சிட்டியை போட்டு அடிக்கின்றார். அத்துடன் மீனாவை கூட்டிப் போகும்போது மீனா தலையில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து மீண்டும் சிட்டியை சரமாரியாக அடித்து விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றார்.

மறுபக்கம் பிஏ வர சொன்ன இடத்திற்கு ரோகிணியும் வித்யாவும் வருகின்றார்கள். அவர்களிடம் தனக்கு 30 லட்சம் தருமாறு கேட்கின்றார். தன்னிடம் காசு இல்லை என்று ரோகிணி சொல்லவும் அப்படி என்றால் உனது வீட்டை வந்து எல்லா விஷயத்தையும் சொல்லி விடுவேன் என மிரட்டுகின்றார். காசை ரெடி பண்ணுமாறு சொல்லிவிட்டு செல்கின்றார் பி ஏ. இதனால் இவனை அடக்க சிட்டித்தான் சரி என்று யோசிக்கின்றார்.


இன்னொரு பக்கம் ரவியின் ரெஸ்டாரண்டுக்கு அவரின் பாஸின் மகள் வருகின்றார். இனி இவர்தான் ரெஸ்டாரண்டை நடத்துவதாக சொல்லிவிட்டு அவரது பெற்றோர் செல்கின்றார்கள். இதனால் அவர் ரவியுடன் ரொம்ப க்ளோஸாக பேசுகின்றார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் நக்கல் அடிக்கின்றார்கள். 

அந்த நேரத்தில் ஸ்ருதியும் அங்கு வந்து விடுகின்றார். அதன் பின்பு ரவி தனது மனைவி என்று ஸ்ருதியை அறிமுகப்படுத்த அதற்கு உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? அப்படி தெரியவில்லையே என சொல்லுகின்றார். இதனால் ஸ்ருதி கோவப்படுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement