தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகையாக திகழ்பவரே வடிவுக்கரசி. இவர் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், விஜய் சேதுபதியோட ஒன்றாக சேர்ந்து படம் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது நான் வேண்டாம் எனக் கூறியிருந்தேன் அதற்கு உடனே விஜய் சேதுபதி ஏன் அம்மா வேண்டாம் என்று சொல்லிட்டிங்க என்று வருத்தப்பட்டார்.
எனினும், எனக்கு ஏதும் நடந்தது என்றால் விஜய் சேதுபதி தான் முதலாவது ஆளாக வந்து நிற்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் வடிவுக்கரசி அவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது விஜயகாந்த் சாருடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த நல்ல குணத்தை இப்ப நான் விஜய் சேதுபதியிடம் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் 2000 பேருக்கு தன்னுடைய செலவில் சாப்பாடு கொடுத்திருந்தார் என்று வடிவுக்கரசி நெகிழ்ச்சியுடன் விஜய் சேதுபதி பற்றி கூறியிருந்தார்.
Listen News!