• Nov 24 2025

வீட்டை விட்டு வெளியேறிய மீனாவை தடுத்து விஜயா கேட்ட கேள்வி.? அண்ணாமலை போட்ட கண்டிஷன்

Aathira / 7 minutes ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில்,  மீனா தன்னுடைய குற்ற உணர்ச்சியினால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு தயாராகின்றார்.  இதன் போது அண்ணாமலை தடுத்து நிறுத்தி என்ன காரணம் என்று கேட்க, முத்துவை திருத்துவதற்காக தான் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்லுகின்றார். 

ஆனாலும்  இது வழக்கமா நடப்பது ஒன்றுதானே  என்று அண்ணாமலை விட்டுக் கொடுக்காமல் பேச,  இடையில் ரோகிணி  அதற்கு எதிராக பேசுகின்றார்.  இறுதியில்  மீனா வீட்டை விட்டு வெளியேற,  விஜயா அவரை தடுத்து இந்த வீட்டில் உள்ள வேலைகளை யார் பார்ப்பது என்று கேட்க, கோபத்தில் இருந்த மீனா  நான் இந்த வீட்டுக்கு மருமகளாக தான் வந்தேன். இதற்கு முன்பு உங்கள் வீட்டில் யார் வேலை பார்த்தார் என்று  பேசி விட்டு செல்கின்றார். 

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து,  மீனா எங்கே என்று கேட்க,  அண்ணாமலை முதலில் சாப்பிட்டு வருமாறு சொல்லுகின்றார். ஆனால் மீண்டும் மீனா எங்கே என்ற முத்து  கேட்க,  விஜயா உண்மையை சொல்லுகின்றார். 


அதன்பின்பு எல்லாரும்   முத்து குடிப்பதை வைத்து அட்வைஸ் பண்ணுகிறார்கள்.  இறுதியில் அண்ணாமலை  இனி நீ குடித்துவிட்டு வந்தால் இந்த வீட்டுக்கு வர வேண்டாம். நானே உன்னை வெளியே விரட்டி விடுவேன் என்று கண்டிஷன் போடுகின்றார். 

இதையெல்லாம் பார்த்த ரோகிணி,  முத்து குடிப்பதை நிறுத்த மாட்டார். அதனால் மீனாவும் இனி வீட்டுக்கு வரமாட்டா.. கொஞ்ச நாளைக்கு நாம நிம்மதியா இருக்கலாம் என்று பெருமூச்சு விடுகின்றார். 

அம்மா வீட்டுக்கு சென்ற மீனாவிடம்  அவருடைய அம்மா, என்ன பிரச்சனை என்று கேட்கவும் அவர் மௌனமாக இருக்கின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட் .




Advertisement

Advertisement