தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து, இன்று முன்னணியில் இருப்பவர் என்றாலும், அவரது பயணம் பலருக்கும் ஒரு அனுபவம்.

இன்று ஒரு சிறப்பு விழாவில் கலந்து கொண்ட போது, SK தனது ஆரம்பகால நினைவுகள் பற்றிய பிளாஷ்பேக்கை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வேகமாக வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
பார்க்கிங் படம் மூலம் அனைவருக்கும் தெரிந்த சினிஷ், இன்று தனது தனிப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளார். இந்த புதிய தொடக்கத்தை கொண்டாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த விழாவில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதே விழாவில் SK தனது ஆரம்பகாலத்தில் சினிஷ் கூறிய பழைய வார்த்தைகளை சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.

“நெல்சனும் நானும் ஒரு அலுவலகத்தில் இருந்த காலம். அப்போது சினிஷ் என்னிடம் வந்து ‘சிவா, நீ என்ன ஆக விரும்புற?’ என்று கேட்டார். நானும் ஜாலியாக 'ஹீரோ ஆகணும்ன்னு சொன்னேன்.”ஆனால் அந்த பதிலுக்கு சினிஷ் எதிர்பாராத ரியாக்ஷன் கொடுத்தார்.
அதாவது, “ஹீரோவா? உங்களுக்கு இந்த வேண்டாத வேலை ஏன்! உங்களுக்கு டைமிங் நல்லா இருக்கு, காமெடி ரோல் ட்ரை பண்ணுங்க. ஹீரோ ஆகாதீங்க.” என்றார்.
சிவா மேலும், “அது அப்படியே முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால் மதிய வேளையிலும் சினிஷ் மீண்டும் வந்து ‘சிவா ஹீரோ நினைப்பு எல்லாம் விட்டு விடுங்க. இது உங்களுக்கு செட் ஆகாது. சதீஷுக்கு செட் ஆகலாம். நீங்க காமெடியனா நடிக்கலாம்ன்னு சொன்னார்!”
இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடிக்கையாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அது சிவகார்த்திகேயனின் மாபெரும் வளர்ச்சியை உணர்த்துகிறது.
Listen News!