தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கமல் ஹாசன் என்பது ஒரு பெயர் அல்ல, அது ஒரு அடையாளம். கடந்த பல தசாப்தங்களுக்கு மேலாக திரையுலகில் தனித்துவமான நடிப்பு மற்றும் கலைத்திறனை காட்டிய கமல் ஹாசன், இந்திய சினிமாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அவரது திரைப்படங்கள் விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவை. ஆனால் சமீபத்தில், பிரபல இயக்குநர் ராஜ குமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் ஹாசனின் நடிப்பைப் பற்றிய தனது தனிப்பட்ட பார்வையை பகிர்ந்துள்ளார்.

இந்த பேட்டியில் ராஜ குமாரன் கூறியதாவது, “கமலை இந்தியாவில் பெரிய நடிகர்னு சொல்லுவாங்க. ஆனா, என்ன பொறுத்தவரை அவர் பெரிய நடிகர் இல்ல. ஏன்னா, அவர் நடிச்சதிலேயே ஒரு 4,5 படம் தான் அவருக்கு பெயர் சொல்லும் படி இருக்கும். மீதி எல்லாம் அவர் நடிச்சது கமர்ஷியல் படம் தான். கமல்னு சொன்னா அவர் நடிச்ச சப்பானி, நாயக்கர், சலங்கை ஒலினு ஒரு 4,5 கதாபாத்திரம் தான் நினைவுக்கு வரும். மீதி எல்லாப் படத்திலயும் கமல் தான் தெரிவார். அந்த கதாபாத்திரம் தெரியவராது.”
ராஜ குமாரன், இதன் மூலம் உண்மையில், கமல் ஹாசன் நடித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் மற்றும் மாஸ் அடிப்படையில் இருக்கும் என்பதை உணர்த்துகிறார். அதே சமயம், கமல் ஹாசனின் கலைப் படைப்புகளில் சில படங்கள் மட்டுமே பார்வையாளர்களின் மனதில் “பெரிய கதாபாத்திரம்” என்ற அடையாளத்துடன் நிலைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!