தமிழ் திரையுலகில் அஜித் ரசிகர்கள் எப்போதும் அவரது புதிய படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” படத்தின் வெற்றி, திரையுலகில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்குப் பிறகு, அஜித்தின் 64வது படம் குறித்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் இது குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில் உருவாகும் புதிய படம் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பைத் தொடங்கும்." என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள், அவரது 64வது படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் போது, பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!