தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளிவந்த படங்களில், ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்த படங்களில் ஒன்றாக காணப்படுகிறது ரியோ ராஜ் – மாளவிகா இணைந்து நடித்த ஆண்பாவம் பொல்லாதது.

இந்த படம் அக்டோபர் 31, 2025 அன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. வெளியான தினத்திலிருந்தே அமோக வரவேற்பைப் பெற்றிருந்த இத்திரைப்படம், தற்போது ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ரசிகர்களிடையே நல்ல பேச்சையும், திரையரங்குகளில் வசூலையும் அள்ளிக் குவித்த ஆண்பாவம் பொல்லாதது இன்று 25வது நாளைக் கடந்துள்ளது.

இன்றைய காலத்தில் பல திரைப்படங்கள் ஒரு வாரத்தைத் தாண்டிப்போனாலே வெற்றி என எண்ணப்படும் சூழலில், 25 நாட்கள் என்றால் அது அந்த படத்தின் நல்ல திரைக்கதை, திரைத்தொழில் நுட்பம் மற்றும் நடிப்பு ஆகியவற்றின் தரத்தைக் காட்டுவதாகும்.
இந்த சாதனையை கொண்டாடும் விதமாக படக்குழு இன்று சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Listen News!