• Nov 24 2025

மீனா-ராஜி இடையே ஏற்பட்ட விரிசல்... எரியுற விளக்கில் எண்ணையை ஊற்றும் மயில்.!

subiththira / 13 minutes ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி தன்ர அண்ணன் செய்த செயலை மருமகள்களுக்குச் சொல்லிப் பேசிக்கொண்டிருக்கிறார். பின் மீனா ராஜியை பார்த்து sorry அத்தைக்கு சப்போர்ட் பண்ணப் போய் உங்க அம்மாவோட கோபமா பேச வேண்டிய நிலைமை வந்திட்டு என்கிறார். அதைக் கேட்ட மயில் உனக்கு இப்பதான் புரிஞ்சுதா பேசும் போது தெரியலையா என்று கேட்கிறார்.


மேலும் அவங்க உனக்கும் அம்மா மாதிரி தானே இப்புடியா பேசுவ என்று கேட்க்கிறார் மயில். அதனை அடுத்து ராஜி மீனாவைப் பார்த்து அதுதான் கதைக்க வேண்டியதெல்லாம் கதைச்சிட்டிங்களே இனி என்னத்த சொல்லுறது என்கிறார். மேலும் எங்க அம்மா கிட்ட இப்புடி பேசி இருக்க கூடாது என்கிறார் ராஜி. அதைக் கேட்ட மீனா ஷாக் ஆகுறார்.

அதனை அடுத்து பாண்டியன் கடையில பழனியையே யோசிச்சுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க செந்தில் போய் பழனி மாமா போனதால நீங்க வருத்தப்படாதீங்க என்கிறார். மேலும் வேற யாரையும் வேணும் என்றால் வேலைக்கு எடுத்துக்கோங்க என்கிறார் செந்தில். இதைக் கேட்ட பாண்டியன் சரவணனைப் பார்த்து இவன் எதுக்கு இங்க வந்து துக்கம் விசாரிச்சுக் கொண்டிருக்கான் என்று கேட்கிறார். 


அதனை அடுத்து செந்தில் கதிர் கிட்ட அப்பா இப்பவரைக்கும் மாறவே இல்ல என்கிறார். அதைக் கேட்ட கதிர் ஏன் இப்புடி எல்லாம் பேசுறீங்க என்று கேட்க்கிறார். பின் கதிர் தான் மாமாவோட கடைக்குப் போய் வாழ்த்து சொல்லப் போறேன் என்று கிளம்புறார். அதனை அடுத்து கதிர் பழனி கிட்ட போய் வீட்டில பேசினத எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement