தமிழ் சினிமாவில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காரணம், இது விஜய் அரசியல் பயணத்திற்கு முன் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதே. இதனால், இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இணையத்தில் விறுவிறுப்பாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. வெளிநாட்டில் நடைபெறும் இந்த இசை விழா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின் படி பல முன்னணி பாடகர்கள் நிகழ்ச்சியில் நேரலையாகப் பாடவுள்ளனர். ரசிகர்களுக்கு இது சிறப்பான அனுபவமாக இருக்கும்.

தயாரிப்பு குழுவின் தகவலின்படி, இசை வெளியீட்டு விழாவில், சைந்தவி , ஆண்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம் மற்றும் திபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னர் ஆண்ட்ரியா விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்தில் 'கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்' என்ற பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இப்போது ஆண்ட்ரியா மீண்டும் விஜய் பட இசை நிகழ்ச்சியில் பாட உள்ளார் என்பது ரசிகர்களை சந்தோசமடைய வைத்துள்ளது.
Listen News!