ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துள்ள சரிகமப சீனியர் சீசன் 5 இறுதிசுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்களும், அவர்களுக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சின்னு செந்தமிழனுக்கு அன்பளிப்பாக புதிய பைக் ஒன்று சர்ப்ரைஸ் கிப்டாக கொடுக்கப்பட்டது. அதனை ரசிகர் ஒருவர் தான் சம்பாதித்த பணத்தில் வாங்கி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
அதேபோல இலங்கை பாடகர் ஆன சபேசன் இறுதி சுற்றில் பாடி முடிந்ததும், உணர்ச்சி பூர்வமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இதன் போது தனது குடும்பத்தை பற்றியும் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், சரிகமப சீனியர் சீசன் ஐந்து நிகழ்ச்சியின் பைனல் நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற போது, மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் சுசாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து முதல் ரன்னரப் ஆக சபேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பணபரிசும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது ரன்னரப்பாக சின்னு செந்தமிழனுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கோல்டன் வாய்ஸ் பவித்ராவுக்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சீசனில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!