பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களாகிவிட்டது. இந்த சீசனில் இதுவரையில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இறுதியாக கெமி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் கெமியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் வெளியே போய் நிம்மதியாக இருக்கட்டும் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
எனினும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ரம்யா என்னதான் பெரிதாக செய்துவிட்டார் என்றும், ஒவ்வொரு வாரமும் அவரை காப்பாற்றுகின்றீர்கள் என்றும் பார்வையாளர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். வார இறுதி நாட்களில் ஹவுஸ்மேட்ஸை கண்டிப்பதே விஜய் சேதுபதிக்கு பெரிய வேலையாக காணப்படுகிறது.

இந்த வாரம் இறுதியாக அவருடைய நண்பர் பிரஜினை கண்டித்த விதம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய வாக்குவாதம் சண்டை மாதிரி ஆகிவிட்டது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் விஜய் சேதுபதிக்குரிய மரியாதை கொடுப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக கெமி எலிமினேட் ஆகி விஜய் சேதுபதியுடன் பேசும்போது, பிக் பாஸ் வீட்டை மிகவும் மிஸ் பண்ணுவதாக கண்கலங்க, நீங்க நல்லாத்தான் விளையாடினீங்க.. கண் கலங்க வேண்டாம் என்று தன்னுடைய கண்ணாடியை கழட்டி கொடுத்தார் விஜய் சேதுபதி. அதை போட்ட கெமி சந்தோஷமாக சிரித்துக் கொண்டு வெளியேறிய காட்சி தற்போது இணையதளங்களில் கவர்ந்து வருகின்றது.
Listen News!