விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் நடிகர் வெற்றி வசந்த். அதேபோல பொன்னி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தை தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது வைஷ்ணவி இணையத்தில் பதிவிட்டு வருகின்றார். இதற்கு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை வைஷ்ணவியின் தந்தை காலமானார். இதனை வைஷ்ணவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல வெற்றி வசந்த் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், எனக்கு நீங்கள் நல்ல உறவினராக 15 மாதங்கள் என்னுடன் இருந்தாலும் நம்மளுடைய உறவு மாமா - மகனாக அல்ல. தந்தை மகனாகவே காணப்பட்டது.

நீங்கள் எப்பொழுதும் எல்லோருக்கும் நான் மகன் என்றே கூறினீர்கள். நான் உங்களை நினைத்து வருந்த மாட்டேன். ஏனெனில் நீங்கள் எப்போதும் என்னுடனும், என்னுடைய குடும்பத்தோடும் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
நாங்கள் இருவரும் இணைந்து இருந்த அந்த தருணங்களை மறக்க மாட்டேன். நாம் பேசிய தருணங்கள், நடனமாடிய தருணங்கள், படங்களை எடுத்த தருணங்கள், நம்முடைய மகிழ்ச்சிகளை பகிர்ந்த தருணங்கள், வாகனத்தில் பயணம் செய்தது, பழைய பாடல்களை கேட்ட சந்தோஷங்கள், எங்களுக்காக பிராத்தித்தது, தல தீபாவளையை கொண்டாடியது, அப்போது வீட்டு வாசலில் நின்று பாராட்டியது, திரைப்படம் பார்த்து ரசித்தது,
சமையல் செய்த தருணங்கள், எங்களை பராமரித்த தருணங்கள், திருமணத்திற்கு பிறகு நீங்கள் எப்பொழுதும் எங்களை அக்கறையாகவே பார்த்தீர்கள். நீங்கள் எப்போதும் இனி எங்களோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நீங்கள் மீண்டும் எங்களோடு இணைந்து வரும் நாட்கள் வரும் என்று நம்புகின்றேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது வைஷ்ணவிக்கு பலரும் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!